science

img

சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுலா தலமாக்க நாசா திட்டம்!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் சுழற்சி முறையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தை, வர்த்தக ரீதியில் சுற்றுலா மையம் ஆக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், முழு சுற்றுலாவிற்கு கிட்டத்தட்ட 58 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;